இனி தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வரவே முடியாது. தமிழகத்தில் மட்டும் அல்ல நாட்டில் காங்கிரஸ் ஆளும்மாநிலங்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என மதுரை தாமரை சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய பாரதிய ஜனதாவின் அகில இந்தியசெயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது , தமிழகத்தில் அடுத்த பாரதிய ஜனதா மாநில மாநாடு, தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சியமைத்த நிலையில் நடைபெறவேண்டும். அதற்கான முயற்சியில் பாஜக,.வினர் தீவிரமாக ஈடுபடவேண்டும். காந்திய கொள்கை, கோட்பாடுகள் காங்கிரஸ்சில் தற்போது இல்லை என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply