மதுரை பாரதீய ஜனதா மாநில மாநாட்டிற்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் , மேலும் அவர் மாநாட்டில் தமலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் புதிய அரசியல்விடிவு ஏற்படும் வகையில் இந்தமாநாடு அமைந்துள்ளது. தமிழகத்தில் தாமரை எங்கே இருக்கிறது என கேட்டவர்களுக்கு எல்லாம், தாமரை இங்கே

உள்ளது என காட்டும் வகையில் இந்தமாநாடு உள்ளது. திராவிடகட்சிகள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன . தமிழகத்தில் விரைவில் பா. ஜ.க ஆட்சி மலரும். வர உள்ள பாராளுமன்றதேர்தலிலும் பா.ஜ.க வெற்றிபெறும்.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை மற்ற மாநில முதல்வர்கள் பின் பற்றி மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Tags:

Leave a Reply