ஊழல் மற்றும் கறுப்புபணத்துக்கு எதிராக பாரதிய ஜனதா தொடர்ந்து போராடிவருகிறது என்று மதுரையில் நடந்த பாரதிய ஜனதா மாநாட்டில் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி பேசினார்.

மதுரை பாரதிய ஜனதா மாநில மாநாட்டில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டு பேசியதாவது .

கடந்த 1947-ம் ஆண்டு நாடுசுதந்திரம் அடைந்தபோது நான் பாகிஸ்தானின் உள்ள கராச்சி நகரில் இருந்தேன். பிறகு இந்தியா-பாக். பிரிவினை ஏறப்ட்டஉடன் எனது 20 வயதில் இந்தியாவுக்கு வந்தேன். இங்கே கூடியுள்ள ‌மக்களை பார்க்கும்போது நான் பெருமையடைகிறேன். இதை போன்ற மாநாட்டு கூட்டத்தினை இதுவரை நான் பார்த்ததில்லை. அதுவும் தமிழகத்தில் இந்த மதுரை_மண்ணில் பார்த்ததில்லை நான் பலமுறை மதுரைக்கு வந்துள்ளேன் . இந்த மாநாட்டில் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.

ஊழல் , கறுப்புபணத்தை ஒழிக்க பா.ஜ. தொடர்ந்து போராடிவருகிறது. முன்னாள் பிரதமர் வாஜபாய் பா.ஜ.வின் மிகபெரிய தலைவராக வந்தபோது நானும் அரசியல் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என எண்ணம் இருந்தது. எனக்கு முன்னால்பேசிய லோக்சபா எதிர் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியதுபோல, மாநாட்டினை சிறப்பாக_நடத்திட பாடுபட்ட பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட_தலைவர்களை நான் பாராட்டுகிறேன். மேலும் இலங்கை தமிழர் விவகாரத்தில் சுஷ்மாசுவராஜ் தலைமையில் சென்ற பாராளுமன்ற குழு , அந் நாட்டு அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் பலனாக அங்கு இலங்கை தமிழர்களுக்கு மேலும்பாதுகாப்பு கூடியுள்ளது. இதற்கு காரணமான சுஷ்மா சுவரா‌ஜை பாராட்டுகிறேன். எத்தனை தேசிய கட்சிகள் உருவெடுத்தாலும் பாரதிய ஜனதவே ஒரு வலுவான தேசிய கட்சி என்று அத்வானி பேசினார்.

Tags:

Leave a Reply