இல‌‌ங்கை‌யி‌ல் உ‌ள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கை தேவை என்று கூறும்போது தமிழக அரசியல் கட்சியின‌ர் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள் எ‌ன்று ம‌க்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

மதுரை‌யி‌ல் நே‌ற்‌றிரவு நட‌ந்த க‌ட்‌சி‌யி‌ன் 5வது மா‌நில மாநா‌ட்டி‌ல் ம‌க்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டு பேசுகை‌யி‌ல், இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய எனது தலைமையில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள ஒரு குழுவை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இலங்கை சென்ற எங்கள் பயணம் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்ப்பதற்காக அல்ல. அது முழுக்க, முழுக்க தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளத்தான். பல்வேறு பகுதிகளுக்கு சென்று இலங்கை தமிழர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்தோம். பின்னர் இலங்கை அதிபரிடம் இது தமிழர்களின் பிரச்சனை அல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரச்சினை என்று கூறினோம். அங்குள்ள தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இங்கிருக்கும் தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்கவேண்டியது உள்ளது. அங்குள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கை தேவை என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை.

இலங்கை தமிழர்களுக்கு நான் ஒரு இந்திய சகோதரி என்ற முறையில் அரசியல் உரிமைகளை அவர்கள் பெறும் வகையில் விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் கருத்தினை உறுதியாக பாராளுமன்றத்தில் தெரிவித்தேன். இலங்கை அதிபர் எனக்கு கொடுத்ததாக கூறப்படும் பரிசுப் பொருள் எனக்கானது அல்ல, அது இந்திய அரசுக்கானது. எனவே அதனை நாடாளுமன்ற கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டேன் எ‌ன்று சு‌ஷ்மா கூ‌றினா‌ர்.

Tags:

Leave a Reply