மதுரை மாநாட்டுக்கு வந்த தொண்டர்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பி மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் நடந்துகொண்டனர் . என்று பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார் .

அவர் மேலும் தெரிவித்ததாவது : தாமரை சங்கம் மாநாடு பெரியவெற்றி பெற்றுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த காவல்துறையினருக்கும் , முதல்வர் ஜெயலலிதாவிற்கும் நன்றி. அதே வேளையில், மாநாடு நடைபெற்றது தெரியாதளவு, கட்சியினர் பிளக்ஸ்வைக்க காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. தி.மு.க., – அதிமுக.,வுக்கு இவளவு தொண்டர்கள் திரண்டிருந்தால் என்ன செய்திருப்பர்?

லட்சக்கணக்கில் மக்கள் கூடுவர் என்று ஏற்கெனவே கூறப்பட்டது. அதற் கேற்ப காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கவேண்டும். மாநாட்டு பந்தலில் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி, காவல்துறையினர் வெளியூர்களிலிருந்து வந்தவர்களை திருப்பிஅனுப்பி, மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டனர்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க, இம்மாநாடு தூண்டுதலாக அமைந்தது.தமிழகத்தை ஆளத் தகுதி படைத்தாக, பா.ஜ., திகழ்கிறது. திராவிட_கட்சிகளின் ஆட்சியில், தமிழக கலாசாரம் சீரழிந்து விட்டது என தெரிவித்தார் .

Tags:

Leave a Reply