இந்திய பாராளு மன்றம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதையடுத்து அதனை சிறப்பிக்கும்விதமாக பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் இன்று சிறப்பு அமர்வுகள் நடைபெறு வருகிறது . இதில் பாராளுமன்றத்தின் அறுபது ஆண்டு கால பயணம் குறித்து விவாதங்களும் நடத்தபடுகின்றன.

இந்நிகழ்ச்சியில் ராஜ்ய சபா எதிர்க் கட்சி தலைவர் அருண்ஜெட்லி பேசியதாவது , ‘பாராளுமன்றத்தின் 60 ஆண்டு கால வரலாற்றில் தீவிரவாதம், சமூகநீதி போன்றவை மிக சவாலாக விளங்கின. இனி வரும் காலங்களிலும் தீவிரவாதம், சமூகநீதி, சுகாதாரம், வறுமையை ஒழித்தல், பெண்களுக்கு அதிகாரம் தருதல் போன்றவை நமக்கு பெரும்சவாலாக இருக்கும். ஏழைநாடுகள் ஜனநாயகத்தை கடைபிடிப்பது கடினம் . ஆனால் நாம் ஏழ்மையிலிருந்து விடுபட்டு வளரும்நாடாக மாறி உள்ளோம். மேலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் இந்தியா விளங்கிவருகிறது என்றார்.

2001ம் ஆண்டு பாராளுமன்றத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலின் போது, நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கும் ஜெட்லி மரியாதை செலுத்தினார்.

Tags:

Leave a Reply