திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமா திபெத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என உலக நாடுகளின் ஆதரவை திரட்டிவருகிறார். இந் நிலையில் சமீபத்தில் தலாய்லாமா ஒரு செய்தி நிறுவனத்துக்கு தந்த பேட்டியின்போது 'சீன உளவுபடையினர் தன்னை கொல்ல சதிசெய்கிறார்கள்' , பக்தர்கள்

வேடத்தில்வந்து தனக்கு விஷம் வைத்து கொல்ல சீன உளவுத் துறை முயற்சி செய்து வருகிறது என குற்றம்சாட்டி இருந்தார்

தற்போது இந்தபுகாரை சீனா மறுத்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் ஆளுங் கட்சி பத்திரிகையொன்றில் வெளியான கட்டுரையில், 'தலாய்லாமா குற்றச் சாட்டு நம்பும் வகையில் இல்லை. அதில் துளிகூட உண்மை இல்லை . அவரை விஷம்வைத்து கொல்வதால் சீன உளவு துறைக்கு எந்தபலனும் ஏற்பட போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.

Tags:

Leave a Reply