வருகிற நவம்பர் மாதம் 6-ந் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது . இதில் ஆளும் ஜனநாய கட்சியின் சார்பில் அதிபர் ஒபாமா போட்டியிடுகிறார். குடியரசு கட்சியின் வேட்பாளர் மிட்ரோம்னி ஒபாமாவை எதிர்த்து களம் இறங்குகிறார்.

இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறது, இதனால் அமெரிக்க் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நடைபெற இருக்கும் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சி.பி.எல். நியூஸ் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தின .

இதில் அதிபர் ஒபாமாவுக்கு பின்னடைவு_ஏற்பட்டுள்ளது. இவர் குடியரசுகட்சி வேட்பாளர் மிட்ரோ ம்னியை விட 3 சதவீதம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.

Tags:

Leave a Reply