விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத்சிங் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர போவதாக மக்களவை எதிர் கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று (செவ்வாய் கிழமை) தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது : ஏர்இந்தியாவை தனியார் மயமாக்குவது குறித்து அஜீத்சிங் பேசியிருக்கிறார் .

நாடாளு மன்ற கூட்ட தொடர் நடந்து கொண்டிருக்கும் போது அரசின் கொள்கை முடிவுகளை அவைக்கு வெளியே குறித்து பேசுவது அவையின் உரிமையை மீறியசெயலாகும். எனவே, அவரின் மீது உரிமைமீறல் மசோதாவை கொண்டு வருவோம். முக்கிய கொள்கைமுடிவுகளை அவைக்கு வெளியே அறிக்கைகளாக விட்டு கொண்டிருக்கிறார் என்றார் சுஷ்மா. அவரது கருத்தை பல் வேறு கட்சிதலைவர்களும் வரவேற்றனர்.

Leave a Reply