மத்தியில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதிலிருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும், பண வீக்கமும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட்ட மொத்தவிலை குறியீட்டு எண் புள்ளிவிவரங்களே தெளிவாக காட்டுகிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப் படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என மத்திய அரசு அடிக்கடி அறிக்கை விட்டு வருகிறதே தவிர நடவடிக்கை எடுத்தபாடில்லை .

மத்தியில் ஐக்கிய முற்போக்குகூட்டணி ஆட்சிக்கு வந்த 2004,ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2012 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் சராசரியாக 63.1% உயர்ந்துள்ளது. என்பதை சமீபத்தில் மத்திய அரசுவெளியிட்ட மொத்த விலை குறியீட்டு எண் புள்ளி விவரங்களே தெளிவாக காட்டுகிறது

உதரணமாக உணவு பொருட்களை கணக்கில் எடுத்துக் கொள்வோம் , இதன் குறியீட்டு எண் 2004,ம் ஆண்டு 98-ஆகா இருந்தது அது தற்போது 2012 ம் ஆண்டு 206.4 ஆக அதிகரித்துள்ளது, அதாவது கிட்ட தட்ட இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. எனவே மக்கள் தங்களது அடிப்படை நுகர்வு தேவைக்கு இரண்டு மடங்குக்கும் அதிகமாக விலை கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுவே மற்ற பொருட்களின் கடும் விலை உயர்வுக்கு வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 8 ஆண்டுகளாக அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்குள் அடங்காமல் உயர்ந்துகொண்டே வருகிறது . இதற்க்கு முக்கிய காரணமே தேவைக்கேற்ப அத்தியாவசிய பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கததே

Leave a Reply