தமிழக முதல்வரும் அதிமுக. பொது செயலாளருமான ஜெயலலிதா ஜனாதிபதி தேர்தலுக்கு மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்க போவதாக தெரிவித்துள்ளார்;

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது ; ஜனாதிபதி வேட்பாளரை_ஆதரிக்க நவீன்பட்நாயக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி

பிஏ.சங்மாவை ஆதரிக்க அ.தி.மு.க அரசு முடிவெடுள்ளது. இந்த மாதம் 15ந்தேதி பிஏ.சங்மா என்னை சந்தித்தார். அவர் மக்களவை சபாநாயகராக பதவிவகித்துள்ளார்.

பழங்குடியின வகுப்பைசேர்ந்த அவர் ஜனாதிபதியாக பதவிவகிக்க தகுதியானவர். பழங்குடியினர் யாரும் இந்தபதவியை வகிக்கவில்லை. சங்மாவை ஆதரிப்பதில் அ.திமுக பெருமைப் படுகிறது என்று கூறினார்.

Leave a Reply