இந்திய கலாசாரத்துக்கே சவால் விடும் மற்றும் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருக்கும் ஐ.பி.எல்.,கிரிக்கெட்டை தடைசெய்ய வேண்டும் என எதிர்ப்பு குரல் அதிகரித்து வருகிறது . பல சர்ச்சைகளில் சிக்கும் இந்த ஐபிஎல்., போட்டி நாட்டுக்கு தேவையற்றது அரசியல் கட்சி பிரமுகர்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பாரதிய ஜனதா எம்.பி,கீர்த்தி ஆசாத் பேசுகையில்: கலாச்சார சீரழிவை உருவாக்கி வரும் இந்த ஐ.பி.எல்.க்கு தடை விதிக்கவேண்டும். இது தொடர்பான விஷயங்களில் எந்த வித நடவடிகையும் எடுக்கபடவில்லை. இதனை வலியுறுத்தி வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தை மேற்கொள்ள போகிறேன் என்றார் .

இது குறித்து லாலுபிரசாத் யாதவ் பேசுகையில்: ஐ.பி.எல்.,என்பதை மூடவேண்டும். சமீபத்திய நிகிழ்வுகள் அனைத்தும் வெறுக்க தக்க வகையில் உள்ளன என்றார் .

ஜனதா கட்சி தலைவர் சுப்பிர மணிய சுவாமி பேசுகையில் : இந்தபோட்டிகள் நாட்டிற்கு தேவையற்றது. பணமும், ஓழுக்ககேடும் தேசியபாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது . அணிதலைவர் தேர்வில் அரசியல் மற்றும் சினிமா துறையினரின் ஈடுபாடும் உள்ளது. மொத்தத்தில் ஐ.பி.எல்., தடைசெய்யப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர் .

Tags:

Leave a Reply