சென்னை அண்ணா நகரில் பதுங்கியிருந்த நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவரை காவல்துறையினர் நேற்று (சனிக்கிழமை) கைதுசெய்தனர்.

அண்ணாநகரில் இருக்கும் ஒரு குடியிருப்பு பகுதியில் நக்சல் இயக்கத்தை சேர்ந்த சிலர் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு

ரகசியதகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து காவல்துறையினர் சனிக்கிழமை அதி காலை அந்தவீட்டை முற்று கையிட்டு திடீர்சோதனை செய்து விவேக் (29) என்பவரை கைதுசெய்தனர். அங்கிருந்த பெண் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

கைது செய்யபட்டுள்ள விவேக், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் தமிழக செயலர் என காவல்துறை விசாரணையில் தெரியவருகிறது .

Leave a Reply