பாகிஸ்தானின் பல பகுதிகளில் டுவிட்டர் இணையதளத்துக்கு தடை விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அரசுதரப்பில் அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப் படாதபோதும் ராவல்பிண்டி இஸ்லாமாபாத் போன்ற இடங்களில்டுவிட்டர் இணைய தளத்தை பார்க்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் உள் துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக், டுவிட்டர்,. பேஸ்புக் இணைய தளங்களுக்கு எந்த வித கட்டுப் பாடுகளும் விதிக்க வில்லை என கூறியிருந்தார். அவர் கூறிய சிலமணி நேரங்களிலேயே இந்த இணைய தளங்களுக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.