என்னை போலி என்கவுண்ட்டரின் மூலம் சுட்டுக்கொல்ல காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளனர் என கூறி ஒருமனுவை நீதிமன்றத்தில் சசிகலா கணவர் நடராஜன் தாக்கல்செய்துள்ளார்.

தஞ்சை காவல்துறையினர் தவறான புகாரின்பேரில் என்னை

கைதுசெய்து சிறையில் அடைத்தனர். புகார் தந்தவர் தற்போது வாபஸ் பெற்றுக்கொண்டார். ஆனால் காவல்துறையினர் உள் நோக்கத்துடன் நடந்துகொண்டனர்.

போலி என்கவுண்ட்டரின் மூலம் என்னை கொலைசெய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். திருச்சி சிறைக்கு என்னை வேனில்கொண்டு செல்லும் போது வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத_காட்டில் என்கவுண்டர் நடத்த திட்டமிட்டனர் என நடராஜன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply