மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாபுக்கு இனி அசைவ உணவுகள் தரப்படாது என சிறைத் துறையினர் தெரிவித்துள்ளனர்

கசாவுக்கும் அவரது பாதுகாப்பு போலீசாருக்கும் அசைவ உணவுகள் தரப்பட்டு வந்தது. பொதுவாக ஆர்தர்ரோடு சிறை கைதிகள் யாருக்கும் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை.

ஆனால், கசாபின் பாதுகாப்பு போலீசார் எப்போதாவது அசைவ உணவுகளை சமைத்து உண்பதோடு, கசாவுக்கும் தருவது வழக்கம்.

இதற்கு மும்பை காவல்துறையினர் ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து சிறையில் கசாவுக்கு உணவுசமைக்கும் பணியில் ஈடுபட்டு_வந்த போலீசார் கடந்தமாதம் இடம் மாற்றப்பட்டு விட்டனர்.

இதையடுத்து மற்ற கைதிகளுக்கு வழங்கபடுவது போன்றே, இவனுக்கும் சைவ_உணவு கொடுக்கப்படுகிறது.

Leave a Reply