குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்திருக்கும் முன்னாள் மக்களவை தலைவர் பிஏ.சங்மா சோனியா காந்தியை சந்திக்க முயற்சித்ததாகவும் ஆனால் அதற்க்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தியை நேரில் சந்தித்து அவரிடம் ஆதரவுகேட்க சங்மா திட்டமிட்டிருந்தார். இதற்காக நேரம் ஒதுக்கித்தருமாறு சோனியாவிடம் சங்மா கேட்டிருந்தார். இருப்பினும் சங்மாவை சந்திக்க சோனியா மறுத்து விட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 சோனியா காந்தி வெளிநாட்டவர் என சங்மா கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply