பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.7.54 அளவுக்கு மத்திய அரசு உயர்த்தியுள்ளது. புதன் கிழமை நள்ளிரவிலிருந்தே இது அமலுக்கு வந்து விட்டது. இது வரை இருந்திராத வகையில் பெட்ரோல் விலை உயர்த்த பட்டிருக்கிறது.

இந்த உயர்வுக்கு பிறகு உத்தேசமாக சென்னையில் பெட்ரோல்

விலை லிட்டருக்கு ரூ.77.25 ஆக இருக்கும். டில்லியில் ரூ.73.20, கொல்கத்தா ரூ.77.80 மும்பையில் ரூ.78.57, என விற்கப்படும்.

டீசல், கேஸ், கெரசின் விலை உயர்த்த படவில்லை: பெட்ரோலின் விலை மட்டுமே உயர்த்த பட்டிருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோலின் மீதான விலையை உயர்த்தி கொள்ளலாம் என்றதவறான கொள்கை முடிவின் தாக்கமே இது.

Leave a Reply