இன்று பா.ஜனதா கட்சியின் இரண்டு நாள் செயற் குழு கூட்டம் மும்பையில் தொடங்குகிறது இதில் தேசிய அளவிலான பிரச்னைகள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி பிரதிபாபாட்டீலின் பதவி காலம், ஜூலை 24ம்

தேதியுடன் முடிவடைகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு நடை பெறும் செயற்குழு கூட்டம் இது என்பதால் . ஜனாதிபதி தேர்தல் ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிக அளவில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது .

இரண்டு நாள் நடைபெறும் இந்த செயற் குழு கூட்டம், கடைசியாக பொது கூட்டத்துடன் முடிவடைகிறது . மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், கட்சியின் மாநில தலைவர்கள் என்று 500க்கும் அதிகமானோர் , செயற் குழு கூட்டத்தில் பங்கேற்பர் என்று , எதிர்பார்க்க படுகிறது.

Leave a Reply