பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி இருப்பதற்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; மத்தியில்_ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு 2வது முறையாக

பொறுப் பேற்று மூன்று ஆண்டுகளில் எல்லா துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது. பத்து தடைவைக்கு மேல் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தியது தான் ஓரே சாதனை. ஓரேநாளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியிருப்பது நாட்டு மக்களை முட்டாள்களாக கருதியதால் மட்டுமே செய்யமுடிந்தது.

ஏற்கனவே விலை வாசி உயர்வால் அவதிப்படும் பொது மக்கள் பெட்ரோல் விலை உயர்வினால் பாதிக்கப் படுவார்கள். ஏழை நடுத்தர மக்கள் வாழமுடியாத நிலை உருவாகும் அத்தியாவசிய பொருட்களின் விலை மிக கடுமையாக உயரும்.

பெட்ரோல் விலை உயர்வினை திரும்பபெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலை நகரங்களில் ஒரு வாரம் தொடர்கண்டன போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார் .

Tags:

Leave a Reply