குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமராவதில் என்ன தவறு இருக்கிறது , பாஜக தேசிய செயற் குழு கூட்டத்தில் மோடியை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: அண்மையில் மேற் கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில் நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக நரேந்திரமோடி விளங்குவதாகத் தெரியவருகிறது . குஜராத்தை மேம்படுத்தி நாட்டின் முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளதே அவரின் செல்வாக்கு பெருகியிருப்பதற்கு முக்கிய காரணம். எனவே, இதைபரிசீலித்து மோடியை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார்.

Leave a Reply