ஊழல் மத்திய அமைச்சர்களின் மீது பிரதமர் மன்மோகன் சிங் எந்த நடவடிக்கையும் மேற்க்கொள்ளததர்க்கு அன்னா_குழு உறுப்பினர்களில் ஒருவரான பிரசாந்த்பூஷன் பிரதமரை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, பிரதமரை பற்றி ஒரு சில தவறான வார்த்தைகளை கூறியிருந்தார், இது நாடு முழுவதும் சிறு சல சலப்பை ஏற்ப்படுத்தி இருந்தது .

இந்நிலையில் இது குறித்து பா.ஜ. க. செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்ததாவது ; பிரதமர் போன்ற உயர் பதவியில் உள்ளவர்களை விமர்சிக்கும் போது வரம்பு மீறிய வார்த்தைகளை பயன் படுத்துவதை ஹசாரே குழுவினர் தவிர்க்க வேண்டும் .அம்மாதிரியான வார்த்தைகளை பயன்படுதாமல், அன்னா குழுவினர் தங்களை கட்டுப்படுத்திகொள்ள வேண்டும் , ‘அதேவேளையில் அன்னா குழுவினரின் குற்ற சாட்டுகளையும், பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டுஉரிய நடவடிக்கை அரசு எடுக்கவேண்டும்’ என ரூடி கூறினார்

Tags:

Leave a Reply