காங்கிரஸ் அரசு தனது 5 ஆண்டு ஆட்சிக்காலத்தை நிறைவுசெய்ய இயலாது, தற்ப்போதைய நிலையில் செயற்கைசுவாசம் பொருத்தப்பட்ட ஒரு நோயாளியை போலவே அரசு உள்ளது என்று யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து தெரிவித்ததாவது , காங்கிரஸ் ஆட்சியில் கணக்கிட இயலாத அளவுக்கு கறுப்புபணம் பதுக்கப்பட்டுள்ளது . கறுப்பு பண விவகாரம்தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசு சார்பில் சமர்ப்பிக்கபட்ட வெள்ளை அறிக்கையானது ‘வெள்ளை பொய்களின் மூட்டை’ வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம் பதுக்கி வைத்துள்ள அரசியல் வாதிகளின் பெயர்களை_வெளியிட மத்திய அரசு பயப்படுவது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார் .

Tags:

Leave a Reply