இந்தியாவில் உள்ள முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்தினை காங்கிரஸ் கூட்டணி அரசு முடக்கி விட்டது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி குற்றம் சுமத்தியுள்ளார் .

இது மேலும் அவர் கூறியிருப்பது: பாரதிய ஜனதா தலைமையிலான

தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்று முக்கிய செயல் திட்டங்களில் ஒன்றாக தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் இருந்தது. நாட்டின் ஒருபகுதியில் வீணாக கடலில்கலக்கும் நதிநீரை, தேவைப்படும் மற்றொரு பகுதிக்கு அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் .

தேசிய முக்கியத்துவம் பெற்ற இந்த திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி முற்றிலுமாக முடக்கி விட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இந்தவிவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அத்வானி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply