நிலமோசடி வழக்கில் சிக்கியுள்ள குஜராத் மாநில ஆளுநர் காம்லா பேனிவாலை நீக்கவேண்டும்  என குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்து நிதின் கட்கரி தலைமையிலான பாரதிய ஜனதா குழுவினர் இன்று மனு தந்தனர் .

ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் அரசு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கியுள்ளது. இதில் ரூ 1000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக தெரியவருகிறது . இந்த நில ஊழல் விவகாரத்தில் குஜராத் ஆளுநர் காம்லா பேனிவாலுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது

Leave a Reply