பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, இன்று நடைபெறும் பாரத் பந்த்க்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவேண்டும் என்று பா.ஜ.க , மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது : மத்தியில் பாரதிய

ஜனதா , அரசு இருந்தபோது, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 40 ரூபாய்க்கு கீழ் இருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு , கடந்த 7ஆண்டுகளில், பெட்ரோலின் விலை, 18 முறை உயர்த்தபட்டு, விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

தேர்தல்காலத்தில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தாமல் இருப்பதும், தேர்தல்முடிந்த பிறகு , விலையை உயர்த்துவதும் காங்கிரசுக்கு_வாடிக்கையாகி விட்டது. தற்போதைய விலை யேற்றம் பொது மக்களின் பொறுமையை சோதித்துவிட்டது. இப்போராட்டம் தமிழகத்தில் வெற்றிபெற பொது மக்களும், அனைத்து அரசியல்_கட்சிகளும் ஆதரவு தரவேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply