பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்று நடைபெற்ற பாரத் பந்த்தின் காரணமாக இந்தியா எங்கும் பல பகுதிகளில் மக்களின் இயல்பு_வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன.

கர்நாடகாவில் மூன்று அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும், புனேவில் பல்வேறு இடங்களில் 13 பேருந்துகளும் தீவைத்து கொளுத்தப்பட்டன .பாட்னாவில் ஐக்கிய ஜனதாதள தொண்டர்கள் ரயில் போக்குவரத்தை_தடுத்து நிறுத்தினர். தில்லியில் ஆட்டோக்கள் வேலை நிறுத்தம் செய்தன. கொல்கத்தாவில் கிழக்குமேற்கு பைபாஸ் சாலையை ஆர்ப்பாட்டகாரர்கள் தடைசெய்தனர். ஆமதாபாதில் மார்க்கெட்டுகளில் கடைகள் அடைக்கப்பட்டன.மும்பையிலும் பல பகுதிகளில் இதே நிலை காணப்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரி , நீலகிரி , மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் அளவு ஆதரவு காணப்பட்டது .

Tags:

Leave a Reply