ஒடிசாவில் மாநில முதல்வர் நவீன் பட்நாயகிற்கு எதிராக பீஜூ ஜனதாதள கட்சியின் பியாரிமோகன் மோகாபட்ரா அதிருப்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் , இதில் ஒரு சில அமைச்சர்களும் கலந்து கொண்டனர் .

இதனால் ஒடிசாவில் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஆலோசனை நடத்தபட்டதாக கூறப்பட்டது. இந் நிலையில் நவீன் பட்நாயக் தனது அமைச்சர்கள் இரண்டு பேரை பதவி நீக்கம் செய்துள்ளார் , மேலும் சர்ச்சைகளுக்கு காரணமான பியாரி மோகனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார்.

Leave a Reply