நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக பா.ஜ.க தலைவர்களான பிரகாஷ் ஜாவேட்கரும், ஹன்ஸ் ராஜ் ஆஹிரும் தந்த புகார்கள் குறித்து விசாரணைசெய்யும் நடவடிக்கைகளை சிபிஐ. தொடங்கியுள்ளது .

மத்திய அரசு கடந்த 2006 லிருந்து 2009ம் ஆண்டுவரை தனியார் நிறுவனங்க்ளுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஏலமுறைப்படி ஒதுக்காமல், முதலில் வந்தவர்களுகு முன்னுரிமை எனும் முறையில் ஒதுக்கி, சில தனியார்_நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதாக அவற்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .

இந்நிலையில் பா.ஜ.க தலைவர்களான பிரகாஷ் ஜாவேட்கரும், ஹன்ஸ் ராஜ் ஆஹிரும் தந்த புகார்களைப் பரிசீலித்த ஊழல் கண் காணிப்பு ஆணையம் அவற்றை முதற் கட்ட விசாரணைக்காக சி.பி.ஐக்கு அனுப்பியது. தற்போது, அந்த புகார்களை பரிசீலித்து, முதற் கட்ட விசாரணைக்கான நடவடிக்கைகளை சிபிஐ. தொடங்கியுள்ளது .

Tags:

Leave a Reply