இந்திய ராணுவ உளவுத்துறையின் ரகசியங்களை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ., உளவுத்துறைக்கு விற்க முயற்சித்த தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த சிவதாசன் என்பவரை பிடித்து ரகசிய விசாரணை மேற்கொள்ள படுகிறது .

கேரளா மாநிலத்தை சேர்ந்த சிவதாசன் ராணுவ உளவு பிரிவில் தலைமை எழுத்தராக பணியாற்றி வருகிறார் . இவர் துபையில் இருக்கும் ஒரு உறவினர் மூலம் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்டை அணுகியுள்ளார். இந்திய ராணுவ ரகசியங்களை தருவதாக ஒப்பு கொண்டு பெரும்பணமும் பேரம் பேசப்பட்டுள்ளது .

இதை கண்டு பிடித்து விட்ட உளவு பிரிவு அதிகாரிகள் சிவதாசனை கடந்த சில மாதமாக ரகசியமாக கண்காணித்து வந்தார்கள் . இந்நிலையில் அதிகாரிகள் ஆதாரத்துடன் அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இவரிடமிருந்து பென்டிரைவ், சிடி.,க்கள், மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்பறபட்டுள்ளன. தக்க நேரத்தில் நமது உளவுத்துறை விரைந்து செயல்பட்டு கருப்பு ஆடை பிடித்துள்ளது

Leave a Reply