ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல துறைகளில் ஊழல் பெருகிவிட்டதாகவும், மாநிலத்தில் நிலவும் பல பிரச்சினைகளையும் சரி செய்ய பா.ஜ. க விரும்புவதாகவும் . இதற்க்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பா.ஜ.க மூத்த தலைவர் ராஜ் நாத் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் :

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஜம்மு காஷ்மீரில் நிலவும் பல பிரச்சினைகளையும் சரி செய்ய பா.ஜ. க விரும்புகிறது. இதற்க்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது இதில் சில அதிகாரிகளும் இடம் பிடித்துள்ளனர். ஆய்வில் ஜம்மு, லடாக் , காஷ்மீர் பகுதிகளில் இருக்கும் மக்களிடையே பாகு பாடு குற்ற சாட்டுகள் இருந்து வருகிறது என்று தெரியவந்துள்ளது.

நீதி , மனிதாபிமாத்தை காஷ்மீரில் நிலை நிறுத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் உரியதீர்வு காணப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க முனைப்போடு செயல்படுகிறது. மாநிலத்தின் பலதுறைகளில் ஆய்வு செய்ததில் பலர் ஜம்முவில் அதிகரித்து வரும் ஊழல் குறித்து தெரிவித்துள்ளனர். இவை அனைத்தையும் அறிக்கையாக தயாரிக்க மூன்று மாதங்களாவது ஆகும் என தெரிவித்தார்.

Leave a Reply