இந்திய பொருளாதார நிலை மற்றும் நிதி பாற்றாகுறை காரணமாக பெட்ரோல் விலையை போன்று டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலையை உயர்த்துவது அவசியம் என பிரதமரின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன் திருவாய் மலர்ந்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; இந்தியாவில் நிதி பற்றாகுறை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் இதனை சீராக்க டீசல், கியாஸ் விலையை விரைவில் உயர்த்தவேண்டும். இதன் விலைகளை உயர்த்தினால் மட்டுமே இந்தியாவின் நிதிபற்றாக்குறையை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார். அதாவது இவங்க எப்போதுமே விலையை உயர்த்துவதற்கு முன்பு இதை போன்ற ஆட்களை வைத்து ஒரு அறிக்கை விட்டு ஒரு பல்ஸ் பார்ப்பார்கள். ஒரு அறிக்கை வந்துவிட்டது விரைவில் விலையேற்ற அறிக்கை அதிகாரபூர்வமாக வரும்

Tags:

Leave a Reply