இந்திய தலைமை தேர்தல் அனையரை நியமிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். தற்போதைய முறை பொது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை என பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமரின் தனிபட்ட ஆலோசனையின் பேரில் மட்டும் குடியரசு தலைவர் தேர்தல் ஆணையர்களை நியமிக்கிறார். இது பொது மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கவில்லை . இந்தமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். எதிர் கட்சிகளின் கருத்துக்களையும் அறிந்து , வெளிப்படையான வகையில் தேர்தல் கமிஷனர்களை தேர்வுசெய்ய வேண்டும் என அத்வானி தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

Leave a Reply