மத்திய அரசில் அங்கம்வகிக்கும் பல அமைச்சர்கள் ஊழல் புகாருக்கு உள்ளாகியுள்ள நிலையில் பாரதிய ஜனதா அரசை விமர்சிக்க ராகுல்க்கு தகுதி இல்லை என கர்நாடக மாநில முதல்வர் சதானந்தகெளடா தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது: கர்நாடகத்தில் ஊழல் ஆட்சி நடப்பதாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் தான் ஊழல் மலிந்துள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் ஊழல் புகாருக்கு உள்ளாகியுள்ளனர். ஊழல் பற்றி பேசவேண்டும் என்றால் மத்திய அமைச்சர்களை பற்றி ராகுல்காந்தி பேசட்டும்.

அதைவிட்டு விட்டு பாரதிய ஜனதா அரசை விமர்சித்திருப்பது வேடிக்கையானது. கர்நாடகத்தில் சுற்றுபயணம் மேற் கொண்டிருப்பதால் ராகுலுக்கு எந்தபலனும் கிடைக்காது. ராகுல்காந்தி சென்று பேசும் மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸக்குத் தோல்வி உறுதி . அதற்கு உ.பி, பிகார் மாநிலங்களே சிறந்த உதாரணம். கர்நாடக பா.ஜ.கவில் எந்த வித குழப்பமும் இல்லை. சட்டமேலவை தேர்தலில் எல்லா தலைவர்களும் கூட்டாக பிரசாரம்செய்து வருகிறோம். 6 சட்ட மேலவைதொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்றார் .

Leave a Reply