கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என கூறுவது தேசத்துரோகமா? என பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது: கறுப்புப்

பணத்தை மீட்கவேண்டும் என பாபா ராம் தேவ் வலியுறுத்துவதை தேசதுரோக நடவடிக்கை என காங்கிரஸ் கருதுகிறதா? . ராம் தேவுக்கு எதிரான சோனியா காந்தியின் குற்றச்சாட்டுகள் தான் ஆதாரமற்றவை. நாட்டின் நலனை கருத்தில்கொண்டு கறுப்பு பணத்தை மீட்கவேண்டும் என கூறுவது எப்படி தேசத்துரோக செயலாகும்.

அவரது பேச்சிலிருந்தே கறுப்பு பணத்தை மீட்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது. இது போன்ற பொறுபற்ற பேச்சுகளை இந் நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள் என கட்கரி தெரிவித்தார்.

Leave a Reply