ஒசாமா பின் லேடன் சவூதி அரேபியாவில் இருந்து துரத்தப்பட்ட பிறகு அவன் சோமாலியாவுக்கு சென்றான். அபுசலீம் மும்பை வெடிகுண்டு தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவன். தாக்குதல்கள் நடந்து முடிந்த சில வருடங்களுக்குப் பிறகு அவன் இந்தியாவை விட்டு தப்பி போர்ச்சுகலுக்கு சென்றான். பயங்கரவாதிகள் பல நாடுகளில் இருந்து குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து பாரத நாட்டுக்கு வருகின்றனர் அல்லது அவர்கள் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுகளுக்கு செல்கின்றனர். தாக்குதல்கள் நடத்தி

தங்கள் "பணியை" அவர்கள் முடித்துக் கொள்கின்றனர். பிறகு பல்வேறு நாடுகளுக்கு திட்டமிட்ட ரீதியில் அவர்கள் தப்பிச் சென்று விடுகின்றனர். இதை பாரத நாட்டின் போலீசும், ராணுவமும் கண்டறிந்துள்ளன. 100கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளும் சில கிறிஸ்துவ நாடுகளும் பாரத நாட்டில் தாக்குதல் நடத்தும் இந்த பயங்கரவாதிகளை இருகரம் கொண்டு வரவேற்கின்றனர். ஆரத்தழுவிக் கொள்கின்றனர். டேவிட் ஹெட்லீ முன்னாள் முஸ்லிம். அவன் பாரதம் மற்றும் பாகிஸ்தானுக்குப் பலமுறை வந்துபோய் உள்ளான்.

பாரத நாட்டைத் தாக்கவே அவன் இத்தகைய பயணங்களை மேற்கொண்டுள்ளான். ஆனால் இதெல்லாம் பற்றி தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று "ஆற்றலும் வல்லமையும் பொருந்திய" அமெரிக்க உளவு ஸ்தாபனங்கள் சி.ஐ.ஏ.வும், எப்.பி.ஐ.யும் பாசாங்கு செய்கின்றன. சில ஈரானியர்கள் பாரத நாட்டுக்கு வருகின்றனர். உள்ளூர்வாசிகள் உதவியோடு இஸ்ரேல் தூதரக அதிகாரியின் குடும்பத்தை மக்கள் நெருக்கடி நிறைந்த டில்லி தெருவில் பட்டப்பகலில் தாக்குகின்றனர். தாவூத் இப்ராஹிமும் அவனுடைய கூட்டாளி களும் பாகிஸ்தானிலோ, துபாயிலோ அல்லது அது போன்ற வேறு ஏதாவது ஒரு இஸ்லாமிய நாட்டிலோதான் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். அசர் மசூத் பாரத நாட்டில் மிகப் பெரும் ஜிஹாதி தாக்குதலை திட்டமிட்டான். அதற்காக அவனை ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அவனை விடுவிக்க கூட்டாக திட்டம் போட்டு செயலாற்றின. அவனுக்காக ஒரு பயணிகள் விமானம் கடத்தப்பட்டது. இறுதியில் மசூத் ஆப்கானிஸ்தானில் தரை இறக்கப்பட்டான், விடுவிக்கப்பட்டான்.

இன்னொரு புறம் அப்பாவி ஹிந்துக்கள் பங்களதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து பாரத நாட்டுக்கு துரத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு வேறு எங்கும் போக்கிடம் இல்லை. அவர்களுக்கு நெருங்கிய சொந்த பந்தங்களை அவர்கள் பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஏற்கனவே இழந்துவிட்டனர். ஹிந்து பெண்கள் அங்கு கற்பழிக்கப்படுகிறார்கள். ஹிந்து ஆண்களை கொலை செய்கின்றனர். அவர்களது சொத்துக்களை கொள்ளை அடிக்கின்றனர். அவர்களுடைய செல்வத்தைப் பறித்துக் கொள்கின்றனர். இதன் பிறகு ஒன்று அவர்கள் சாகவேண்டும் அல்லது பாரத நாட்டுக்கு ஓடி வரவேண்டும். பாரத அரசாங்கமோ அவர்கள் இந்த நாட்டுக் குடிமக்கள் இல்லை. எனவே அவர்களுக்கு எந்த வோட்டுரிமையோ அல்லது சொத்து உரிமையோ கிடையாது என்று சொல்கிறது. ஆனால் இதே அரசாங்கம் தினமும் அஸ்ஸாம், திரிபுரா, வங்காளம் ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக குடி ஏறிக்கொண்டு இருக்கும் பங்களாதேஷி ஊடுருவல் காரர்களுக்காக எல்லா விதிகளையும் வளைக்கிறது. எல்லா விதிகளையும் காற்றில் பறக்க விடுகிறது. ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள், மலேஷிய ஹிந்துக்கள், இந்தோனேஷிய ஹிந்துக்கள் ஆகியோர் அந்தந்த அரசாங்கங்கள் தங்களுக்கு இழைக்கும் மிருகத்தனமான, அதிகாரபூர்வ கொடுமைகளைப் பற்றி கூரை ஏறி கூப்பாடு போட்டுக் கொண்டு உள்ளனர். ஆனால் இத்தகைய மிருகத்தனமான மனித உரிமைகள் மீறல் குறித்து பாரத அரசாங்கம் கண்ணை மூடிக்கொள்கிறது. ஹிந்துக்களுக்கு எங்கு போகவும் போக்கிடம் இல்லை. அவர்கள் பாரதம் வந்தாலும் அவர்களுக்கு புகலிடம் இல்லை. ஜிஹாதி பயங்கரவாதிகள் எல்லா இஸ்லாமிய நாடுகள் மற்றும் ஒரு சில கிறிஸ்துவ நாடுகள் தரும் தஞ்சத்தை உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் செய்த பாதக செயல்களுக்கு பாரத நாட்டின் கிரிமினல் சட்டப்படி மரண தண்டனைதான் கிடைக்கும். ஆனால் இந்த ஜிஹாதி பயங்கரவாதிகள் தங்களுக்கு தஞ்சம் கொடுத்த நாட்டின் சட்ட விதிகளைப் பயன்படுத்தி மரண தண்டணையில் இருந்து கூட விலக்கு பெற்று விடுகின்றனர். அதன் பிறகு நிம்மதியாக சந்தோஷமாக வாழ்கின்றனர். ஆனால் ஹிந்துக்கள் எங்கு போவார்கள்?

குற்றங்களை விடுங்கள். அப்பாவி ஹிந்துக்கள் கூட பாரத நாட்டுக்கு வந்து தங்கள் கலாச்சார வேர்களைக் கண்டு கொண்டு வாழ பாரத அரசாங்கம் வழிவிடுவது இல்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, நேபாள், மலேசியா, இந்தோனேசியா, இன்னும் இது போன்ற பலநாடுகளில் ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனிதஉரிமை மீறல்கள் அயோக்யத் தனங்களைக் கண்டித்து பாரத நாட்டின் வெட்கமற்ற அரசாங்கம் எழ வேண்டும்.

ஆனால் பாரத அரசாங்கமோ வோட்டுகளுக்காக பாரத நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு "இட ஒதுக்கீடு" கொடுப்பதில் மும்மரமாக உள்ளது. ஆஸ்ரேலியாவில் உள்ள ஏதோ ஒரு ஹனிபை விடுவிக்க, இங்கிருந்து சட்ட நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை பாரத அரசாங்கம் அனுப்புகிறது. மத்திய கிழக்கு நாட்டில் உள்ள ஏதோ ஒரு நௌஷாத் விஷயத்திலும் பாரத அரசாங்கம் இவ்வாறுதான் நடந்து கொண்டது.

ஸ்ரீலங்காவில் தமிழர்களின் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதைப் பற்றி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது பாரத அரசுக்கு அவமானம் நிரம்பிய கறையாகும். பாரத அரசின் தூதரக மற்றும் மனித தோல்விகளை இந்த தீர்மானம் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. இத்தகைய தீர்மானத்தை பாரத அரசாங்கம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கவேண்டும்.

சர்வதேச சக்திகள் அத்தகைய விஷயங்களை கையாள்வதில் "தங்களுடைய சொந்த நலன்களை" கணக்கில் எடுத்துக் கொண்டே அணுகுவார்கள். பாரத அரசாங்கம் ஸ்ரீலங்கா அரசை நேரத்தில் வரம்புக்குள் கொண்டு வந்து இருக்க வேண்டும். ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் பாரத அரசு எடுத்து இருக்க வேண்டும். அப்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இம்மாதிரி தன் மூக்கை நுழைக்க சந்தர்ப்பம் கிடைத்து இருக்காது. ஆனால் பாரத அரசோ முஸ்லிம்களையும் கிருஸ்துவர்களையும் வோட்டுகளுக்காக அவர்களை தாஜா செய்வதிலேயே எப்போதும் குறியாக இருக்கிறது. எனவே ஸ்ரீலங்கா தமிழர்கள் விஷயத்தை கவனிக்கவோ அந்த பிரச்சனையின் தீவிரத்தை உணரவோ பாரத அரசால் இயலவில்லை. மேலும் இப்படியும் சொல்லலாம். அதுதான் உண்மையும் கூட. ஸ்ரீலங்கா தமிழர்கள் ஹிந்துக்கள் என்பதால் பாரத அரசாங்கம் அவர்களைப் பற்றி கவலையே படவில்லை. வேண்டும் என்றே அவர்களின் நிலையை பாரத அரசு புறக்கணித்துவிட்டது.

இது அரசியல் மற்றும் ராஜீய உறவுகள் சம்பந்தப்பட்ட விசித்திரமாகும். எந்த அரசாங்கமும் தன்னுடைய சொந்த மக்களையோ அல்லது தன்னுடன் சம்பந்தமுள்ள மக்களையோ நிர்கதியாக விடக்கூடாது. ஆனால் இதைத்தான் இந்திய அரசாங்கம் வருடக் கணக்காக ஹிந்துக்களுக்கு செய்து கொண்டுள்ளது. ஜிஹாதி பயங்கரவாதிகள், மாவோயிஸ்டுகள் இன்னும் இவர்கள் போன்றவர்கள் எல்லாம் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ நாடுகளில் அடைக்கலம் பெற்றுக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஹிந்துக்கள் மட்டும் தங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து துரத்தப்பட்ட ஹிந்துக்களுக்கு தங்கள் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவைகளை ஏற்பாடு செய்து கொடுத்தோம். ஆனால் இந்த விஷயத்தில் பாரத அரசாங்கம் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. மாறாக பல ஹிந்துக்களிடம் கேள்விக் கணைகள் தொடுத்தனர். ஆனால் பிற தேசங்களில் இருந்து வரும் ஹிந்துக்களுக்குத்தான் இந்த நிலை என்று நினைக்க வேண்டாம். இங்குள்ள ஹிந்துக்களுக்கும் அதே கதிதான். பாரத நாட்டில் உள்ள ஹிந்துக்களையும் மத்திய மாநில அரசுகள் அவர்களுடைய சொந்த கதிக்கே விட்டுவிட்டன.

1990ஆம் ஆண்டில் இருந்து காஷ்மீர் பண்டிதர்களும், சீக்கியர்களும் தங்களுடைய நிலம், சொத்து, வோட்டளிக்கும் உரிமை ஏன் தங்களுடைய கெளரவம் ஆகியவை தங்களுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆனால் பாரத அரசாங்கம் அவர்களை புழு பூச்சிகளாக கருதுகிறது. ஆனால் பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்தும் காஷ்மீரில் இருந்தும் சரண் அடைந்த ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு பாரத அரசாங்கம் போலீஸ் வேலைகளை அள்ளிக் கொடுக்கிறது. இதுமாதிரி உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்காது. பெரும்பான்மை சமூகத்தை பாதுகாக்க வேண்டிய கடமை பொறுப்பில் இருப்பவர்கள், சிறுபான்மையினரின் சந்தோஷத்திற்காக, அவர்களின் வோட்டுகளுக்காக பெரும்பான்மையோரின் நலன்களைத் தியாகம் செய்கிறார்கள்.

குரூரமாக, பச்சையாக சொல்வது என்றால் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், அவர்கள் பாரத நாட்டு குடிமக்களோ அல்லது வேறுநாட்டு குடிமக்களோ என்ன குற்றத்தை வேண்டுமானாலும் செய்யலாம். பாரத நாட்டை காயப்படுத்தலாம். ஹிந்துக்களை வேட்டையாடலாம். அதன் பிறகு நிம்மதியாக, சந்தோஷமாக, வேறு எந்த ஒரு நாட்டிற்கும் சென்று வாழலாம். அவர்கள் குற்றம் சாட்டப்பட்டால் கூட, பாரத நாட்டு சட்டங்களுக்கு அவர்கள் உட்படுவதில்லை. உட்படுத்தப்படுவதும் இல்லை. அவர்கள் வைத்ததே சட்டம். இந்த பாரத அரசாங்கம் கடைந்து எடுத்த கோழைத்தனமான அரசாங்கம் ஆகும். ஹிந்துக்கள், சாதுக்கள், துறவிகள், ஆகியோரைக் கைது செய்து அவர்களை சிறைக்கு அனுப்பி, அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி இந்த அரசாங்கம் தன்னுடைய "வீரத்தை" வெளிப்படுத்திக் கொள்கிறது. இது மாதிரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களை விசாரணைக்கு கூட உட்படுத்தாமல் இதே மத்திய அரசுதான் அவர்களை விடுதலையும் செய்கிறது. இந்த பாரத அரசாங்கம் பாகிஸ்தான் நீதி விசாரணைக் கமிஷனை நம் நாட்டுக்கு வர அனுமதிக்கிறது. அஜ்மல் கசாப் வழக்கில் சம்பந்தப்பட்ட நம் நாட்டின் துணிச்சல் மிக்க போலீஸ் அதிகாரிகளையும், நீதிபதிகளையும் விசாரிக்க பாகிஸ்தான் நீதி விசாரணை கமிஷனை பாரத அரசாங்கம் அனுமதிக்கிறது. முஸ்லிம்களையும், கிருஸ்துவர்களையும் தாஜா செய்ய இன்னும் எந்த அளவுக்கு பாரத அரசு கீழே குனியும்? மண்டி போடும்?

பாரதப் பிரதமர் 2 அப்பாவி குழந்தைகளை தங்களுடைய பெற்றோர்களுடன் சேர்ந்து கொள்ள அனுமதிக்குமாறு நார்வே நாட்டு பிரதமரைக் கேட்கிறார். உடனே நார்வே நாட்டு பிரதமர் "2 ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட நார்வே கம்பெனி "டெலினோர்" விஷயமாக பாரதப் பிரதமரிடம் கேட்கிறார். இது என்ன பண்ட மாற்று வியாபாரமா? கோபத்துக்கே இந்த நிலையைப் பார்த்தால் கோபம்வரும்.

கந்தமால் ஓடிசாவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதி அது. சில வருடங்களுக்கு முன்பு ஹிந்து சன்யாசி சுவாமி லக்ஷ்மணாநந்த மகராஜை அங்கு படுகொலை செய்தனர். இப்போது சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் மாவோயிஸ்டுகள் 2 இத்தாலிய சுற்றுலா பயணிகளை கடத்தி சென்றனர். சுவாமி லக்ஷ்மணாநந்த மகாராஜின் முயற்சியால் 3000 கிறிஸ்துவர்கள் தாய் மதம் திரும்பிய சில நாட்களில் அவர் படுகொலை செய்யப்பட்டார். கிறிஸ்துவ சர்ச்சுதான் இக்கொலையை செய்யத் தூண்டி உள்ளது என்பது வெளிப்படை. மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இத்தாலிய சுற்றுலா பயணி அவர்கள் மத்தியில் சிரித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் பத்திரிக்கைகளில் வெளியானது. இந்த இரு இத்தாலிய சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் புரி நகரில் 15 வருடங்களாக தங்கி உள்ளார். இவ்வளவு காலம் அவர் சுற்றுலா சென்று பார்த்துக் கொண்டு இருந்தாரா? அல்லது அப்பாவி ஹிந்துக்களை பணம் கொடுத்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றிக் கொண்டு இருந்தாரா?

இக்கேள்விகளை பாரத அரசு கேட்க வேண்டும். ஒவ்வொரு அந்நிய நாட்டினரின் விசா மற்றும் அது காலாவதியாகாமல் உள்ளதா என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும். ஆனால் வனவாசிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து அவர்கள் உரிமைகளை நசுக்கிய சர்ச்சை எதிர்த்து ஒரு வனவாசி எம்.எல்.ஏ.யே போராடினார். அவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். அதை நம் பாரத அரசு வேடிக்கை பார்த்தது. இதில் இருந்தெல்லாம் தெரிவது என்ன? வெளியாட்கள் பாரத நாட்டுக்குள் வருகின்றனர். குற்றங்களை செய்கின்றனர். பாரத அரசாங்கம் ஹிந்துக்களை காப்பாற்ற எதுவும் செய்யாது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அத்தகைய எண்ணம் எதுவும் பாரத அரசுக்கு இல்லவே இல்லை. மாறாக வெளிநாட்டவர்க்கு சாதகமாக எல்லா சட்டங்களையும் அது வளைத்துப் போடும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

பிற நாடுகளில் இருந்து வரும் ஹிந்துக்கள், அவர்கள் குடி உரிமை பெற்றுள்ள பாரத நாட்டிலேயே பாதுகாப்பின்றி உள்ளனர். பாரத நாட்டில் உள்ள ஹிந்துக்கள் அவர்களின் சொந்த பாரத நாட்டில் பாதுகாப்பின்றி உள்ளனர். இன்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் அரசியல்வாதிகளின் ஆட்சியில் ஹிந்துக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. ஹிந்துக்களுக்கு எங்கு போகவும் போக்கிடம் இல்லை. சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத், மற்றும் இது போன்ற இதர சில ஸ்தாபனங்கள் இத்தகைய கொடுமையான நிலையின் அபாயத்தை பாரத நாட்டுக்கும், உலகத்துக்கும் உணர்த்த, தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் அனைத்து வழிகளிலும் செய்து வருகின்றனர்.

ஹிந்துக்கள் தங்கள் கண்களை திறந்து கொள்ள வேண்டும். போலி மதசார்பின்மை மற்றும் போலி மதசார்பற்றவாதிகள் ஹிந்துக்களை கும்பகர்ண உறக்கத்தில் ஆழ்த்தியுள்ளனர். "எல்லோருக்கும் வளர்ச்சி" என்பது உண்மையில் ஹிந்துக்களை ஒதுக்கிவிட்டு, முற்றிலும் புறக்கணித்துவிட்டு, ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதே என்பதே நடைமுறையாக உள்ளது. அரசாங்கம் தானாகவே முன்வந்து ஹிந்துக்களுக்கு என எதுவும் செய்யாது. ஹிந்துக்கள் மிகவும் காலம் கடந்து விடுவதற்கு முன்னால் உறக்கம் கலைந்து விழித்து எழ வேண்டும்.

ஆங்கிலத்தில்: டாக்டர்.பிரவீன் பாய் தொகாடியா

தமிழாக்கம்: லா.ரோஹிணி

Leave a Reply