கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கைதொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ப.சிதம்பரமும், அதிமுக.வின் சார்பில் ராஜ கண்ணப்பனும் போட்டியிட்டனர்.

இறுதிசுற்று வாக்கு எண்ணிகையின் போது கடுமையான இழுபறிக்கு

பிறகு ப.சிதம்பரம் 3354 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை ஏற்று கொல்லாத ராஜ கண்ணப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தமனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் அளித்த தீர்ப்பில், சிவகங்கை தேர்தல் வழக்கிலிருந்து தனக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இது குறித்து பாரதிய ஜனதா தேசியத் தலைவர் நிதின் கட்காரி தெரிவித்ததாவது

ப.சிதம்பரத்தை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு நான், பிரதமரைக் கேட்டுகொள்கிறேன். அவருக்கு பதவியில் நீடிப்பதற்க்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. முறைகேடுகள்_காரணமாக, சிதம்பரத்தை உடனே பதவிநீக்கம் செய்யவேண்டும். சிதம்பரத்தை காப்பாற்ற சோனியா காந்தி முயற்சி செய்கிறார் . சிதம்பரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்?என கேள்வி எழுப்பியுள்ளார்

Leave a Reply