ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாமே மிக பொருத்தமான வேட்பாளர் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து தெரிவித்ததாவது ,என்னை பொறுத்த வரையில் ஜனாதிபதி வேட்பாளருக்கு முக்கியமாக மூன்று தகுதிகள்

இருக்கவேண்டும். அவர் முதலில் களங்கம் இல்லாதவராகவும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவராகவும் , ஜனாதிபதி பணி குறித்து ஆழ்ந்த அறிவை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

இத தகுதி அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு உள்ளன. அப்துல் கலாம்தான் ஜனாதிபதி பதவிக்கு மிக பொருத்தமானவர் என்றார்.

Leave a Reply