புதுக்கோட்டை சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஜூன் 12 -ம் தேதி நடைபெறுகிறது இதையடுத்து அங்கு மூன்றடுக்கு பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடைதேர்தலில் மொத்தம் 1,94,980 பேர் வாக்களிக்க

தகுதிபெற்றுள்ளனர் இதில் ஆண்கள் 97,371 பேர், பெண்கள் 97,604 பேர் , தேர்தல் பாதுகாப்பு பணியில் 452 ஊர்க்காவல் படையினரும் , 1,489 உள்ளூர் காவல் துறையினரும், 330 தமிழ்நாடு சிறப்பு காவல்படைனரும், 550 எல்லை பாதுகாப்பு படைகாவலர்களும் என மொத்தம் 2,821 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. தேர்தல்பிரசாரம் வரும் 10ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

Leave a Reply