ஜனாதிபதி தேர்தல்தொடர்பாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானியை, பி.ஏ. சங்மா சந்தித்து பேசினார். அப்போது ஜூலை மாதம் நடைபெறயிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரிக்குமாறு வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

காங்கிரஸ் , பா.ஜ.க . உள்ளிட்ட முக்கிய கட்சிகள் சார்பில் இது‌வரை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பிஜூ ஜனதா தளம், அ.தி.மு.க. ஆதரவை பெற்ற பி.ஏ.சங்மா பா.ஜ.க மூத்த ‌தலைவர் அத்வானியை சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது .

Tags:

Leave a Reply