மாற்றுத் திறனாளிகளின் நலனில் அதிக அக்கறை செலுத்தி, அவர்களது நலன் காத்த நிறுவனங்கள், தமிழக அரசு அளிக்கும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். கீழ்காணும் விருதுகள் சுதந்திர தின விழா 15 ஆகஸ்டு 2012 அன்று வழங்கப்படும்.

இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிட்பபில்,

1. மாற்றுத் திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் – 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

2. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த தொண்டு நிறுவனம் – 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ரூ. 50,000/- ரொக்க பரிசு

3. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறப்பு சமூகப்பணியாளர் – 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ்

4. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்- 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

5. மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் – 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ. 25,000/- ரொக்க பரிசு

(மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்)

6. சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்

மேற்காணும் விருதுகள் பெற, முதன்மைச் செயலாளர் /மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை 78 அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் பெற்று விண்ணப்பங்கள் மற்றும் சான்றுகளுடன் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று முதன்மைச் செயலாளர் /மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களுக்கு 5.07.2012 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags:

Leave a Reply