ஊழல் புகாரில் சிக்கிய சுவிஸ் ஆயுத நிறுவனத்தை கறுப்பு பட்டியலில சேர்ப்பதற்கு மத்தியஅரசு ஈடுபட்டிருந்தது. அப்போது, பிரபல ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா, தன செல்வாக்கை பயன்படுத்தி, கறுப்புபட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்துவதாக_கூறி, அந்த நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ.3 கோடியை லஞ்சமாக பெற்றார்.

இது தொடர்பாக, அபிஷேக் வர்மாவின் மீது சிபிஐ. வழக்குப் பதிவு செய்து. அவரையும், அவரது மனைவி அன்சியா நியாஸ் குவையும் விசாரணைக்கு அழைத்தது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தெளிவான பதிலை பெறமுடிய வில்லை , இதைதொடர்ந்து அவர்களை சி.பி.ஐ. கைது செய்தது. அபிஷேக் வர்மா கடற்படை ரகசியங்களை விற்றவழக்கிலும் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply