சிந்துசமவெளி நாகரீகம் என அழைக்கப்படும் நாகரீகத்தை பேணிக்காத்ததில் "சரஸ்வதி நதி" பெரும் பங்கு ஆற்றியுள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட "புதிய ஆய்வில்" இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

"ஹரப்பா நாகரீகத்தின் நீர் வழி கட்டமைப்பு", என்னும் புதியஆய்வு சமீபத்தில் ஒருமுடிவுக்கு வந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்தை ஆறுகள்தான் காப்பாற்றி வந்தன. அந்த ஆறுகளை வளப்படுத்தி வந்த "பருவ மழைகள் "கிழக்குத் திசை" நோக்கி இடம் பெயர்ந்ததால் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்துவிட்டது. இதைத்தான் அந்த ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ளன. ஆறுகள் வற்றிப்போனதால் 4000 வருடங்களுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரீகம் அழிந்துபோனது. 2003 மற்றும் 2008 ஆண்டுகளுக்கு இடையே அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ருமானியா ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தஆய்வை மேற் கொண்டனர். சிந்து சமவெளி நாகரீகம் அழிந்ததற்கு "விதிவசத்தால் நேர்ந்த கொடுமையான "அயல் நாட்டுப் படையெடுப்புதான்" காரணம் என்று இதுவரை பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. அதை இந்த ஆராய்ச்சி முடிவுகள் பொய் என நிரூபிக்கின்றன. ஆறுகள் தங்கள்போக்கை மாற்றி கொண்டதால் தான் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்தது என்னும் வாதத்தையும் இந்தகண்டுபிடிப்பு பொய் ஆக்குகிறது. இப்போது சிந்து சமவெளி நாகரீகம் என்று நாம் அழைக்கும் நாகரீகம் சரஸ்வதி நதியின் கரையில் அமைந்து இருந்தது என்னும் கருத்துக்கு இந்த ஆய்வு வலு சேர்க்கிறது.

சரஸ்வதி நதி புராணத்திலும், வேதத்திலும் குறிப்பிடப்படுகிறது. சிந்து சமவெளி நாகரீகத்தின் அடையாளங்களாக இதுவரை பல தொல்பொருள் விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 70 சதவீதத்திற்கும் மேலானவை இந்த சரஸ்வதி நதிக்கரையில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த சரஸ்வதி நதிவறண்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3000 அகழ்வாராய்ச்சி படிமங்களில் 2000 கும் மேற்பட்டவை சிந்துவெளி எல்லைக்கு அப்பால் இருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவைகளில் இருந்துதான் சிந்து வெளிநாகரீகம் என்ற பெயரே வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வேறு வார்தைகளில் சொல்வது என்றால் சிந்துவெளி நாகரீகம் என்று அழைக்கப்படுவது உண்மையில் பெரும்பகுதியில் சரஸ்வதிநதி நாகரீகம்தான். இருந்தும் நமக்கு சொல்லப்பட்டது போல், இந்த நாகரீகத்தை சிந்து சமவெளி நாகரீகத்துடன் மட்டுமே சம்பந்தப்படுத்தி நாம் பேசுகிறோம். அப்படித்தானே பள்ளிக் கூடங்களிலும் சொல்லிக் கொடுக்கிறோம்? பல வருடங்களாக இடதுசாரிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள நமது அரசாங்கம், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே சரஸ்வதி நதி என்று ஒன்று இருந்ததைக் கூட ஒப்புக் கொள்ளவில்லை. அப்படி இருக்கும்போது உலகின் மிகப்பண்டைய நாகரீகத்தை சரஸ்வதி நதிக்கரை உருவாக்கியது என்னும் உண்மையை அவர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்? மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் எச்சூரி சமீப வருடங்களில் இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை "தொலைந்து போன சரஸ்வதி நதியை" ஆராய்வதில் நேரத்தையும், பணத்தையும் வீணடித்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றார். 2006 ஆம் ஆண்டில் சீதாராம் எச்சூரி போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சார பாராளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்தார். அப்போது அவர் பின்வருமாறு கூறி உள்ளார்.

"இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தனக்கு இடப்பட்ட பணியில் இருந்து மாறிப்போகிறது. தொல்பொருள் விஷயமாக 'விஞ்ஞான பூர்வ ஆராய்சிகளை மேலேடுத்து செல்வதில் அது தவறி விட்டது. விஞ்ஞான பூர்வ இலாகாவான தொல்பொருள் ஆராய்ச்சி துறை இந்த விஷயத்தில் சரியாக செல்லவில்லை".

இப்படி திரிக்கப்பட்டாலும் கூட, விஞ்ஞான பூர்வ ஆராய்சிகள் "சரஸ்வதி" ஒரு மாபெரும் நதியாக இருந்ததை சந்தர்பங்கள் நிரூபித்துள்ளன. நிலத்துக்கு அடியில் ஓடிக்கொண்டு இருந்த நீர்வழிகளைக் குறித்து "பல வரைபடங்கள்" இன்றும் காணக் கிடைக்கின்றன. அவைகளை எல்லாம் நன்கு ஆராய்ந்துள்ள நிபுணர்கள் சரஸ்வதி நதி 1500 கிலோமீட்டர் நீளமும், 3 இல் இருந்து 15 கிலோமீட்டர் வரை அகலமும் கொண்டு இருந்தது என்று கண்டு பிடித்துள்ளனர்.

நேஷனல் அகடமி ஆப் சயின்ஸ் நிகழ்வுகள் என்பதில் சரஸ்வதி நதி குறித்த மிக சமீபத்திய கண்டு பிடிப்புகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சரஸ்வதி நதி இருந்தது, இந்த பண்டைய நாகரீகம் செழிக்க சரஸ்வதி நதி காரணமாக இருந்தது என்பது அந்த கண்டு பிடிப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி நதி இமயமலையில் இருந்து பருவமழை காரணமாக எப்போதும் பெருக்கடுத்து வரும் தண்ணீரை சார்ந்து இருக்கவில்லை என்று அந்த கண்டுபிடுப்புப் பிரசுரம் கூறுகிறது. சரஸ்வதி நதி உள்பட அந்த நாகரீகப் பிரதேசத்தில் இருந்த நதிகள் அனைத்தும் மிகப் பெரியதாக, மிகவும் ஜீவ நதிகளாகவும் இருந்தன என்றும் அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புது கண்டு பிடிப்பால் அரசாங்கத்திற்கு "புதிய சிந்தனை உருவாகுமா"? சிந்து சமவெளி நாகரீகம் என்று இப்போது அழைக்கப்படும் நாகரீகத்தை சரஸ்வதி – சிந்து – நாகரீகம் என்று அதிகாரபூர்வமாக "புதுப் பெயரிட்டு அழைக்கும் வேளை வந்து விட்டதை அரசு ஒப்புக் கொள்ளுமா? ஆனால் இடதுசாரிகள் காலம் காலமாக இதை மறுத்து வந்துள்ளது போல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் இந்த உண்மையை பல வருடங்களாக எற்றுக் கொள்ளமல்தான் இருந்து வருகிறது. அப்போது மத்திய அமைச்சரவையில் கலாச்சார துறை மந்திரியாக் இருந்த ஜெயபால் ரெட்டி, "இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், மண்மூடிப்போன எந்த நதி பற்றியும் கண்டு பிடிக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் சொன்னார். அவருக்கும், அவரது அரசுக்கும், சரஸ்வதி நதி என்பது கற்பனை மனங்களில் உருவானது; அந்த நதி பற்றி புராணங்கள்தான் இன்னும் அதிக கற்பனையோடு பேசுகின்றன என்ற எண்ணம் உள்ளதை ஜெயபால் ரெட்டியின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது. சரஸ்வதி நதி பாரம்பரிய திட்டம் என்னும் திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உருவாக்கி இருந்தது. அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கலைத்துவிட்டது. செப்டம்பர் 2003 இல் இந்த திட்டத்திற்கு 32 கோடிகள் செலவாகும் என்று தோரயமாக கணக்கிடப்பட்டு இருந்தது. அதை காங்கிரஸ் கூட்டணி அரசு எவ்வித இரக்கமும் காட்டாமல் கைவிட்டது. இன்று 5 கோடிகளாக குறைத்து. அதாவது சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு தொடரவிடாமல் காங்கிரஸ் கூட்டணி அரசு செய்து அந்த திட்டத்தையே குழி தோண்டிப் விட்டது புதைத்து.

சரஸ்வதி நதி என்பதே இல்லை என்று கூறிட காங்கிரஸ் கூட்டணி அரசு முழு முயற்சி செய்தாலும், உண்மைகள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் உள்ளன. சரஸ்வதி நதி இருந்தது என்பதற்கும், சிந்து சமவெளி நாகரீகம் என்று அழைக்கப்படும் நாகரீகம் தழைக்க சரஸ்வதி நதி ஆற்றிய இன்றியமையாத பங்கையும் காங்கிரஸ் கூட்டணி அரசால் ஒதுக்கித்தள்ள இயலாத வகையில் இப்போது உண்மைகள் வெளி வந்துள்ளன. இப்போது கண்ணுக்கு தெரியாமல் உள்ள சரஸ்வதி நதி இருந்ததற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என்ற தன்னுடைய முந்தைய நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை இப்போது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்பு முதல் ஐந்து வருடங்களின் மத்தியில், "விஞ்ஞானிகள் நீர் வழி பாதைகளை கண்டறிந்துள்ளனர். அவை "சந்தேகத்திற்கு இடமின்றி" (இந்த பதம் ஆராய்ந்த விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்பட்டது). "வேத கால சரஸ்வதி நதி இருந்ததை நிரூபிக்கின்றது" என்று காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ராஜ்யசபாவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "சரஸ்வதி நதி பூமிக்கு கீழே ஓடுவதை" சாடிலைட் புகைப்படங்கள் நிரூபித்து உள்ளனவா"? அப்படி இருந்தால் அந்த மிகவும் இன்றியமையாத நீர் வழிப் பாதைகளை நம் நாட்டு தேவைக்காக ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது" என்பதுதான் ராஜ்ய சபாவில் கேட்கப்பட்ட கேள்வியாகும். காங்கிரஸ் கூட்டணி அரசு சரஸ்வதி நதி இருந்ததை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர் என்னும் உண்மையை அந்த கேள்விக்கு பதில் அளித்து ஒப்புக் கொண்டுள்ளது.

ஜோத்பூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் உள்ளது. ராஜஸ்தான் அரசு நிலத்தடி நீர் துறையும், இந்த விண்வெளி ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து ஆய்வுகளை நடத்தின.அதன் முடிவுகள் "நுண்ணறிவுக்கான இந்திய சமூகத்தின் இதழில்" வெளியிடப்பட்டுள்ளது. அந்த முடிவுகளை மத்திய நீர் வழி அமைச்சரகம் இப்போது "எழுத்து பூர்வமாக" வெளியிட்டுள்ளது. பிற விஷயங்களைத் தவிர பின் வருவனவற்றையும் அந்த ஆராய்சிகளை செய்தவர்கள் கூறியுள்ளனர்.

"ஹரப்பா நாகரீகத்திற்கு முந்தைய, ஹரப்பா நாகரீகத்தை – ஹரப்பா நாகரீகத்திற்குப் பிறகு, என பிரித்து விண்வெளி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த புகைப்படங்கள் மூலம், இந்த நாகரீகத்தின் வடகிழக்குப் பகுதியில், வேதசரஸ்வதி நதியின் வலிமையான, தொடர்ச்சியான, கழிவு நீர்த் திட்டம் இருந்துள்ளது தெரிகிறது. அகழ்வாரய்சிகளும் இதை உறுதிப் படுத்துகின்றன. இதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை… வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள சரஸ்வதி நதி பற்றிய வர்ணனைகளுடன் இந்த ஆராய்ச்சி முடிவுகளும், விண்வெளி புகைப் படங்களும் மிகச் சரியாக ஒத்துப் போகின்றன.

இதில் விசேஷம் என்னவென்றால், இந்த விஷயம் குறித்து இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் தேசிய பொருட்காட்சி வெளிப்படையாக அறிவித்துள்ளது. தேசிய பொருட்காட்சி அலுவலகத்தில் "ஹரப்பா நாகரீகம்" என்று ஒரு அரங்கு உள்ளது. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நிதானமாக, அடுத்தடுத்து இந்த மக்கள் ஒரு நாகரீகத்தை உருவாக்கினர். இந்த நாகரீகம், ஹரப்பா நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம், சிந்து – சரஸ்வதி நாகரீகம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சொல்லிவிட்டு சரஸ்வதி நதியின் முக்கியத்துவம் குறித்து அந்த அறிவிப்பு இவ்வாறு மேலும் குறிப்பிடுகிறது. "இப்போது ஒரு விஷயம் மிகவும் தெளிவாகி விட்டது. ஹரப்பா நாகரீகம் என்பது இரண்டு நதிகளின் நன்கொடை ஆகும். சிந்து, சரஸ்வதி என்னும் இரு நதிகளின் நன்கொடைதான் ஹரப்பா நாகரீகம் ஆகும். இது வரை நம்பப்பட்டது போல், ஹரப்பா நாகரீகம் சிந்து நதியின் நன்கொடை மட்டுமே அல்ல ".

சர்வதேச விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த புது ஆராய்ச்சிக்கு மற்றொரு பரிமாணமும் உள்ளது. அந்த விரும்பத்தகுந்த விஷயத்தையும் இங்கு குறிப்பிடுவது அவசியம். இந்த பண்டைய ஹரப்பா நாகரீகம் அழிந்து போக அந்நிய ஆக்ரமிப்புகள், படையெடுப்புகள் காரணமாக இருந்தன என்னும் வாதத்தை இந்த புதிய கண்டுபிடிப்புகள் முற்றிலும் நிராகரிக்கின்றன. ஆனால் இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு பல காலம் முன்பாகவே நவரத்னா ராஜாராம் "சரஸ்வதி நதியும், வேத நாகரீகமும்" என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். அதில் சரஸ்வதி நதி இருந்தது என்ற கண்டுபிடிப்பால், ஆர்யர்கள் இந்தியாவை ஆக்ராமித்தனர் என்ற ஆரிய திராவிட இனவாதம் முற்றிலும் பொய் என்று நிருபிக்கப்பட்டுள்ளது, என

நவரத்னா ராஜாராம் குறிப்பிட்டுள்ளார். சரஸ்வதி நதி இருந்தது என்ற கண்டு பிடிப்பு இந்த பொய்க்கு மரண அடி கொடுத்துவிட்டது என்று அவர் சரியாக குறிப்பிட்டுள்ளார்.

ஆரிய திராவிட இனவாதம் கூறுவது என்ன? ஆரியர்கள் இந்தியாவை ஆக்ரமித்தபோது அங்கு ஹரப்பா நாகரீகம் இருந்தது. அந்த ஹரப்பா நாகரீகம் வேத சம்பந்தம் கொண்டது அல்ல. அந்த நாகரீகத்தை ஆரியர்கள் அழித்துவிட்டு, வேத நாகரீகத்தை ஸ்தாபித்தனர் என்பதுதான்.

ஆனால் சரஸ்வதி நதி குறித்த பல விவரங்கள் வேதத்தில் உள்ளது. வேத காலத்தில் சரஸ்வதி நதி ஓடியுள்ளது. எனவே வேத காலமும், ஹரப்பா நாகரீக காலமும் இணைந்தே இருந்திருக்க வேண்டும், எனவேதான் ராஜாராம் தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் சரியாக.

"ஹரப்பா நாகரீகம் என்பது ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நாகரீகம்தான்" , அப்படி என்றால் பொருள் என்ன? ஹரப்பா நாகரீக மக்கள் வேத நாகரீகத்தை பின்பற்றியவர்கள்.

எனவே ஆரிய திராவிட இனவாதம் எவ்வளவு பெரிய ஹிமாலயப் பொய், பித்தலாட்டம் என்பது இதில் இருந்து தெளிவாகிறது. நிபுணர்கள் ஹரப்பா நாகரீகம் ஆக்ரமிப்பால் அழிந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை, அது ஆரியர்களால் அழிக்கப்பட்டது என்பதற்கு சுத்தமாக எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடுவது மிகச் சரியாகும். ஆரியர்கள் வெளி நாடுகளில் இருந்து இங்கு வந்தனர் என்பதற்கும் ஆதாரம் எதுவும் இல்லை. ஹரப்பா நாகரீகம் சிந்து மற்றும் சரஸ்வதி நதிக் கரைகளில் செழித்த நாகரீகம். அது வேத சம்பந்தம் கொண்டது. அந்த நாகரீகம் அழிந்ததற்கு "சரஸ்வதி நதி" வற்றிப்போனதே முக்கிய "காரணமே தவிர எந்த ஒரு அன்னியப் படையெடுப்பும் அல்ல. இதை ராஜாராமும் மற்ற பலரும் தெளிவாக்கி உள்ளனர்.

சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில் சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானம் எது என்பது மட்டும் இன்னும் கேள்விக் குறியாக உள்ளது. சரஸ்வதி நதி ஹிமாலய நதி அல்ல என்று அந்த ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் பல நிபுணர்கள் சரஸ்வதி நதி கார்வால் (ஹிமாலயாவில் உள்ளது) பகுதியில் உள்ள "ஹர – கி – துன்" வீழ்ச்சியில் இருந்து உற்பத்தி ஆகிப் பெருகி வந்தது என்று குறிப்பிடுகின்றனர். இது விஷயமாக இறுதி வார்த்தை என்ன என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்

ஆங்கிலத்தில்: ராஜேஷ் சிங்

தமிழாக்கம்: லா.ரோஹிணி

One response to “சிந்து சமவெளி நாகரீகமும் சரஸ்வதி நதியும்”

Leave a Reply