ஆந்திரவில் நடை பெற்ற சட்டப் பேரவை இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்றுள்ளது. 18 தொகுதிகளுக்கு நடை பெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் கட்சி 15 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே

தெலங்கானா ராஷ்டிரசமிதி (டிஆர்எஸ்) வெற்றி பெற்றது. பிரதான எதிர் கட்சியான தெலுங்கு தேசமோ அனைத்து தொகுதியிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

இதனால் மொத்தம் உள்ள 294 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டபேரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 155 ஆக குறைந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

Tags:

Leave a Reply