அளவுக்கு அதிகமாக கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்த முன்னணி மருந்து நிறுவனங்கள் தங்களின் மருந்துகளின் உற்பத்திசெலவை விட பத்து மடங்கு விலை கூடுதலாக வைத்து விற்பதாக மத்திய நிறுவன விவகாரதுறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவருகிறது .

குறிப்பிட்ட 21 முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை மத்திய நிறுவன விவகாரத்துறை அமைச்சக உற்பத்தி விலை ஆய்வுப்பிரிவு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மக்கள் அடிக்கடி பயன் படுத்தும் வலி நிவாரணி, இருமல் போன்ற மருந்து வகைகளுக்கு அவற்றின் உற்பத்திசெலவை காட்டிலும் பத்து மடங்கு கூடுதலாக விலை வைத்து விற்கப்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது .

Leave a Reply