ரூபாய் நோட்டுகளில் மாற்றத்தை கொண்டுவர  ரிசர்வ் வங்கி பரிசீலனைஇந்திய ரூபாய் நோட்டுகளில் 1996 ம் ஆண்டு முதல் ரூபாய் நோட்டுக்கள் அனைத்திலும் காந்தி படம் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் ரூபாய் நோட்டுகளில் மாற்றத்தை கொண்டுவர ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் காந்தி படத்தை மட்டும் அச்சிடுவதற்கு பதிலாக, நாட்டுக்கு பாடுபட்ட பிறதலைவர்களின் படங்களையும் இடம் பெறச்செய்ய வேண்டும் என பொது மக்களிடமிருந்து ரிசர்வ் வங்கிக்கு கடிதங்கள் குவிந்து வருகின்றன.

இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ரிசர்வ் வங்கி இதில் தன்னிச்சையாக முடிவு எதையும் மேற்கொள்ள இயலாது. இருப்பினும் அரசுக்கு பரிந்துரைகளை மட்டுமே செய்யமுடியும். எனவே, பொது மக்களின் கோரிக்கையை ஆராய்ந்து விரைவில் மத்திய அரசுக்கு தனது பரிந்துரையை அனுப்ப உள்ளது.

Leave a Reply