பேஸ்புக்கின்  மூலம் கலாமுக்கு ஆதரவு திரட்டும் மம்தா பானர்ஜி அடுத்த ஜனாதிபதியாக அப்துல் கலாமைதான் தேர்வுசெய்ய வேண்டும் இது ஒட்டுமொத்த இந்தியமக்களின் விருப்பம் ‘என, பேஸ்புக்கின் மூலமாக, கலாமுக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு திரட்டுகிறார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் தெரிவித்திருப்பதாவது : நாட்டில் இருக்கும் அனைத்து மக்களும், அப்துல் கலாமைதான் அடுத்த ஜனாதிபதியாக்க வேண்டும் என்று விரும்பு கின்றனர். நாட்டுமக்களின் உணர்வுகளைதான், நான் பிரதிபலிக்கிறேன் .எனது கருத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன். யாருக்காகவும் எனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டேன் .

அறிவு, நேர்மை போன்றவற்றில் சிறந்து விளங்கும் கலாமை, அடுத்த ஜனாதிபதியாக தேர்வுசெய்ய வேண்டும் கோடி கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் அப்துல்கலாம், நாட்டின் பெருமைகுரிய நபர். அரசியல் சார்பு அற்றவர். உண்மையின் அடிப்படையில் செயல் படுபவர். என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் .

Leave a Reply