ஒரு தமிழரே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்; பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு தமிழரே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்” என பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது , பெட்ரோல் விலை உயர்வினை கண்டித்து பா.ஜ.க சார்பில் வரும் 22 ந் தேதி சிறைநிரப்பும்

போராட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்திலிருந்து மட்டும் “ஒரு லட்சம் பேர்வரை கலந்துகொள்வார்கள்”.

பாரதிய ஜனதாவின் தலைமை அறிவிக்கும் ஜனாதிபதி_வேட்பாளரை நாங்கள் ஏற்றுகொள்வோம். இருப்பினும் வெங்கட் ராமன் , அப்துல் கலாமை போன்று மீண்டும் தமிழர் ஒருவர் ஜனாதிபதி மாளிகையை அலங்கரிக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply