அப்துல் கலாம்தான் மக்களின் குடியரசுத் தலைவர்; மம்தா பானர்ஜிகுடியரசு தலைவர்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அப்துல் கலாம் அறிவித்திருப்பது வருத்தம் தருகிறது . இருப்பினும் அவர்தான் “மக்களின் குடியரசுத் தலைவர்’ என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது : கலாம் ஒரு

நேர்மையானவர்; ஒரு நல்ல வழிகாட்டி. அவரை மீண்டும் குடியரசு தலைவராக்க வேண்டும் எனும் மக்களின் விருப்பத்துக்கு ஒரு சில அரசியல் கட்சிகள் செவி சாய்க்கவில்லை. மறைமுக பேரம், ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எனினும், மக்கள் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது. நாட்டின் நலனுக்காக குரல்கொடுத்த அனைவருக்கும் நன்றி” என மம்தா தெரிவித்துள்ளார்.

Leave a Reply