அன்னா ஹசாரே அரசியல் சட்டத்தையும் மிஞ்சிய சக்தியாக என்னக்  கூடாது குடியரசு தலைவர்_வேட்பாளராக அறிவிக்கபட்டுள்ள பிரணாப் முகர்ஜி மீதான புகார்களை புகார்களை விசாரிக்கவேண்டும் என்ற அண்ணா ஹஸôரே குழுவின் கோரிக்கைக்கு பா.ஜ.க. கடும்கண்டனம் தெரிவித்துள்ளது .

இது குறித்து பா.ஜ.க.வின் துணை தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி தெரிவித்ததாவது : அண்ணா ஹஸôரே குழு தங்களை இந்திய அரசியல்_சட்டத்தையும் மிஞ்சிய சக்தியாக என்னக் கூடாது. சமூக ஆர்வலர்களிடம் நற் சான்றிதழ் பெற்று தான் ஒருவர் தேர்தலில்போட்டியிட வேண்டும் என்பது கிடையாது.

பிரணாபை பாரதிய ஜனதா ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை. இப்படி பொத்தம் பொதுவாக கருத்து தெரிவிப்பது அவர்களது இயக்கத்துகே நல்லதல்ல. நமது சட்டமுறை என்பது எந்த விவகாரத்தை பற்றியபுகாரையும் விசாரித்து தனது கடமையை செய்யக்கூடியது. என்ற நிலை இருக்கும் போது நமது சட்டதிட்டங்களுக்கும் விஞ்சிய சக்தியாக தங்களை யாரும் நினைத்து கொள்ளக்கூடாது என தெரிவித்தார் .

Leave a Reply